Monday, June 20, 2011

DERIVATION FOR D2/162

We know the formula D2/162 which is being used for calculate unit weight of reinforcement per meter.
Here I am willing to explain how it has been arrived D2/162 (Note: D unit is in MM)
Weight of bar per meter = Area of steel bar X Density of steel x Length of bar
= (3.14 x D2/4) x 7850 kg/m3 x 1 m
= D2 X 6162.25/(1000x1000)
= D2 X (0.006162)
= D2 X 1/(0.006162)-1
= (D2/162.28)

The actual value is D2/162.28

Kindly note that this function is only applicable for circular shape steel which density is 7850kg/m3

HOW TO CALCULATE INGREDIENTS OF RCC

For an Example,
Let us consider grade of concrete as M15 (Mix 1:2:4)
Let,
Quantity of concrete – 1 m3
Normally we consider 90% of coarse aggregate in total quantity of concrete, Hence
20mm coarse aggregate – 0.90 m3
Fine aggregate = 0.90 m3 x 2/4 à (2 part of fine aggregate / 4 part of coarse aggregate)
= 0.45 m3
Cement = 0.45 m3 x ½ à (1 part of cement / 2 part fine aggregate)
= 0.225m3
= 0.225 x 1440 kg/m3
= 324 kg
Note: 1440 kg is the density of cement

Thursday, May 5, 2011

யோனிப் பொருத்தம் இல்லாவிட்டால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

திருமணத்தைப் பொருத்தவரை யோனிப் பொருத்தம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பொதுவாக திருமணத்தின் முக்கிய குறிக்கோள் புதிய சந்ததியை (குழந்தைகள்) உருவாக்குவது. இதற்கு தம்பதிகளுக்குள் உடல் ரீதியான உறவு முக்கியம்.

சுக்கிரன் நீதி, சுக்கிரன் நாடி ஆகிய நூல்களில் தம்பதிகளுக்கு பொருத்தம் பார்க்கும் போது அதனை லக்னம், ராசி ஆகிய 2 கோணங்களில் பார்க்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஜோதிடத்தைப் பொறுத்தவரை லக்னம் என்பது உயிர்; ராசி என்பது உடல்.

உதாரணத்திற்கு ஒருவர் மீன லக்னம், ரிஷப ராசி என்றால், மீன லக்னத்திற்கு 7, 8ஆம் இடம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்பதுடன், ராசிக்கும் 7,8ஆம் இடத்தைப் பார்க்க வேண்டும்.

ஜோதிட ரீதியாக ராசி என்பது சந்திரன் இருக்கும் இடத்தைக் குறிக்கிறது. உடல், மனதிற்கு உரிய கிரகம் சந்திரன். உடலுறவுக்கு உடலும், மனதும் ஒத்துழைக்க வேண்டும். எனவே, யோனிப் பொருத்தத்தைக் கணிக்கும் போது ராசியையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

யோனிப் பொருத்தம் உடல் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் ஜோதிடத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு விலங்குகள் கூறப்பட்டுள்ளன. அந்த வகையில் தம்பதிகளுக்கு உரிய விலங்குகள் பகை இல்லாத வகையில் இருக்க வேண்டும்.

நான் ஆய்வு செய்த வரை ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு உரிய விலங்கு உடல் ரீதியான உறவு மேற்கொள்ளும் தன்மைகள்/இயல்பு சம்பந்தப்பட்டவருக்கும் காணப்படும்.

உதாரணமாக அஸ்வினி நட்சத்திரத்திற்கு உரிய விலங்கு ஆண் குதிரை என்று ஜோதிடத்தில் கூறப்பட்டு உள்ளது. எனவே, குதிரைக்கு உரிய சுபாவங்கள்/தன்மைகள் சம்பந்தப்பட்டவர் மேற்கொள்ளும் உறவின் போது வெளிப்படும். இது காம சாஸ்திரத்திலும் கூறப்பட்டுள்ளது.

ஒரு சில தம்பதிகளுக்கு யோனிப் பொருத்தம் இல்லாமல் போவது உண்டு. இதன் காரணமாக அவர்களில் ஒருவர் வேறு துணையை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதன் காரணமாக பண்பாடு, கலாசாரம் உடைகிறது. இதற்கு யோனிப் பொருத்தம் இல்லாத தம்பதிகளுக்கு உடலுறவில் நீடித்த தன்மை, மகிழ்ச்சி, மனநிறைவு இல்லாததே காரணம்.

கள்ளக்காதல், முறைதவறிய உறவுகள் உள்ளிட்ட விடயங்களை நாம் ஆய்வு செய்ததில் அந்த தம்பதிகள்/காதலர்களுக்கு யோனிப் பொருத்தம் இல்லை என்பது தெரியவந்தது.

மற்றொரு கோணத்தில் பார்த்தால், ஒரு சில ஆண்களுக்கு எழுச்சிக் குறைபாடு காணப்படும். இதற்கு லக்னத்திற்கு 3ஆம் இடம் (போகஸ்தானம்) காரணம். லக்னத்திற்கு 3ஆம் இடத்தில் நல்ல கிரகங்கள் அமர்ந்திருக்க வேண்டும். அதேபோல் 3க்கு உரியவரும் சிறப்பாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எழுச்சிக் குறைபாடு ஏற்பட வாய்ப்புண்டு.
சமீபத்தில் குழந்தை இல்லாத காரணத்திற்காக என்னிடம் வந்திருந்த ஒரு தம்பதியரின் ஜாதகத்தைப் பார்த்த போது பெண்ணுக்கு (சிம்ம லக்னம்) 3ஆம் இடத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தார். ஆனால் தனுசு லக்னத்தை உடைய ஆணின் ஜாதகத்தில் 6ஆம் இடத்தில் கேதுவுடன் சேர்ந்து சனி மறைந்திருந்தார். தனுசு லக்னத்திற்கு 3ஆம் இடத்திற்கு உரியவரான சனி, 6ஆம் இடத்தில் பாவ கிரகத்துடன் இணைந்து மறைந்ததால், அவரால் மனைவியை உடல் ரீதியாக திருப்தியளிக்க முடியவில்லை.

இந்தத் தம்பதிக்கு நட்சத்திரப்படி யோனிப் பொருத்தம் இருந்தது. ஆனால் கிரக அமைப்புகளின் படி, ஆணின் லக்னத்திற்கு 3ஆம் இடம் கெட்டுப் போனதால் புணர்ச்சியின் போது அவரது உறுப்பில் எழுச்சி ஏற்படாத குறைபாடு காணப்பட்டது. மருத்துவ ரீதியாக செயற்கையாக சில சிகிச்சைகள் மேற்கொண்டு பலன் கிடைக்கவில்லை என அவர்கள் கூறினர்.

கடந்த பிறவியிலோ, இந்தப் பிறவியிலோ கலவி நிலையில் உள்ள ஒருவரை (அது மனிதராகவும் இருக்கலாம்; விலங்கு/பறவையாகவும் இருக்கலாம்) சம்பந்தப்பட்ட ஜாதகர் பிரித்தால் அல்லது இடையூறு செய்தால் 3க்கு உரிய கிரகம் பாவ கிரகங்களுடன் சேர்ந்துவிடும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதன் காரணமாக அவருக்கு போக சுகம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

மற்றொரு பெண், தனது கணவரின் ஜாதகத்தையும், தனது ஜாதகத்தையும் கொண்டு வந்து தனக்கு எப்போது விவாகரத்து கிடைக்கும் எனக் கேட்டார். அவரிடம் விடயத்தை முழுமையாகக் கேட்ட போது முதலில் சொல்லத் தயங்கிய அவர், பின்னர் தனக்கு திருமண வாழ்க்கையில் ஈடுபாடு இல்லை என்று கூறினார்.

அவரது கணவரின் ஜாதகம் மிகவும் சிறப்பாக இருந்தது. லக்னாதிபதி உட்பட முக்கிய ஸ்தானங்கள் அனைத்தும் நன்றாக காணப்பட்டது. மனைவியின் ஜாதகத்தைப் பார்த்த போது இருவருக்கு யோனிப் பொருத்தம் இருந்தாலும், 3ஆம் இடம் கெட்டுப்போய் இருந்தது.

அந்த பெண்ணுக்கு ரிஷப லக்னம். அதற்கு 3ஆம் இடத்து அதிபதியான சந்திரன், ராகுவுடன் இணைந்திருந்தார். இதன் காரணமாக அவருக்கு உடலுறவில் பெரியளவில் ஈடுபாடு இல்லை. ஆனால் அவரது கணவருக்கு போகஸ்தானம் சிறப்பாக இருந்ததால் அவர் தன் மனைவி மீது அதிக ஈடுபாட்டுடன் இருந்தார். கணவரின் ஆசைகளை அந்த மனைவியால் ஈடு செய்ய முடியாத காரணத்தால் மனைவி விவாகரத்து பெறும் முடிவுக்கு மனதளவில் வந்திருந்தார்.

மேலும், அந்தப் பெண்ணுக்கு தன்னுடைய சிறு வயதில் இருந்தே காதல், கலவி உள்ளிட்ட விடயங்கள் தவறானவை என்று தனது பாட்டியால் ஆணித்தரமாக உணர்த்தப்பட்டதாகவும் என்னிடம் கூறினார்.

இதன் காரணமாக என்னால் கணவரை முழுமையாக திருப்திப்படுத்த முடியவில்லை. சந்திரன், ராகுவுடன் இணைந்ததால் அந்தப் பெண் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவருக்கு உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் போய்விட்டது என்றார்

ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்?

வாசகர் கேள்வி: நானும், என் மனைவியும் காதல் திருமணம் செய்து கொண்டோம்? எங்கள் வீட்டிலும் இதனை ஏற்றுக் கொண்டனர். ஆனால் சமீபத்தில் ஜாதகத்தைக் கணித்துப் பார்த்ததில் இருவருக்கும் ரஜ்ஜு பொருத்தம் (மாங்கல்யம்) இல்லை என்பது தெரியவந்தது. இதனால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க பரிகாரம் உள்ளதா?

பதில்: இந்தக் கேள்வியை எழுப்பிய வாசகர் தனது ராசி, லக்னம், நட்சத்திரம் என எந்தக் குறிப்பையும் தெரிவிக்கவில்லை. அவற்றை வைத்தே துல்லியமான பரிகாரங்களைக் கூற முடியும்.

எனினும், கஞ்சனூர் சென்று சுக்கிரனை வழிபட்டால் ரஜ்ஜு பொருத்தம் இல்லாததால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக் கொள்ள முடியும்.

புத்திர தோஷம் என்றால் என்ன? அதனை நிவர்த்தி செய்ய என்ன பரிகாரம்?

புத்திர தோஷம் என்பது ஒவ்வொரு லக்கினத்திற்கும் வேறுபடும். பொதுவாக எந்த லக்னமாக இருந்தாலும் 5ஆம் இடம்தான் புத்திர ஸ்தானத்தை குறிக்கும். எனவே, அந்த 5ஆம் இடத்தை முக்கியமாக பார்க்க வேண்டும்.

“சேர்த்து வைத்த புண்ணியம்தான் குழந்தையாகப் பிறக்கும்” என்று பழமொழி உண்டு. அந்த வகையில் 5ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானமாகவும் திகழ்கிறது. தாய்மாமன், தாய்வழி உறவுகள், மனப்பான்மை ஆகியவற்றைக் குறிப்பதும் 5ஆம் இடம்தான்.

ஐந்தாம் இடத்தில் பாவ கிரகங்கள் (ராகு, செவ்வாய், சனி) அல்லது சூரியன் அமர்ந்தால் ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போகும் அல்லது தாமதமாக கிடைக்கும். ஒருவேளை 5ஆம் இடத்தில் உள்ள பாவ கிரகங்களை சுபக் கிரகங்கள் பார்த்தால் (ஒவ்வொரு லக்னத்திற்கும் சுபகிரகங்கள் வேறுபடும்- மேஷத்திற்கு சந்திரனும் சுபக்கிரகம்) குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

ஐந்தாம் வீட்டிற்கு உரிய கிரகம் பாவ கிரகங்களுடன் சேர்ந்தாலும் புத்திர தோஷம் ஏற்படும். உதாரணமாக கடக லக்னத்தை உடைய ஒருவர் என்னைப் பார்க்க வந்திருந்தார். அவருக்கு 5ஆம் வீடு விருச்சிகம் (செவ்வாய்). ஆனால் அவரது ஜாதகத்தில் செவ்வாய் 8இல் மறைந்திருந்தது. அவருக்கு 5ஆம் இடத்தில் எந்தப் பாவ கிரகமும் கிடையாது. ஆனால் 5க்கு உரிய கிரகம் 8இல் மறைந்திருப்பதால், மனைவிக்கு கருக்கலைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கூறினேன். அதற்கு பதிலளித்துப் பேசிய அவர், இதுவரை தனது மனைவி 4 முறை கர்ப்பம் தரித்தாலும், சிறிது நாட்களிலேயே கரு கலைந்து விடுவதாக வருத்தத்துடன் கூறினார். கடக லக்னம், சிம்ம லக்னதாரர்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி 6 அல்லது 8இல் மறைந்தால் இதுபோன்று நிகழும்.

அதேபோல் ஆணின் ஜாதகத்தில் புத்திர தோஷம் இருந்து, பெண்ணின் ஜாதகத்தில் 7ஆம் இடம் நன்றாக இல்லாமல் இருந்தால் கர்ப்பப்பை கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, திருமணத்திற்கு முன்னர் பொருத்தம் பார்க்கும் போதே இதனை நன்றாக ஆராய்ந்து பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இதேபோல் “புத்திரக்காரகன் புதன் மனை சென்றிட புத்திர சூனியம்” என்ற ஜோதிட மொழியும் சில நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. புத்திரக்காரகன் குரு, புதனின் வீட்டில் (மிதுனம், கன்னி) இருந்தால் புத்திர சூன்யம் (ஆண் வாரிசு இல்லாமை) ஏற்படும் என்பதே இதன் உள்ளர்த்தம்.

ஆனால், குரு பரிவர்த்தனை பெற்றிருந்தாலோ அல்லது லக்னத்திற்கு யோகாதிபதியின் நட்சத்திரத்தில் ஜாதகர் பிறந்திருந்தாலோ ஆண் வாரிசு கிடைக்க வாய்ப்புள்ளது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, புத்திர தோஷத்தைப் பொறுத்த வரை ஜோதிட ரீதியாக பல விடயங்களை கணக்கிட வேண்டும்.

ஆடி‌யி‌ல் ‌திருமண‌ம் செ‌ய்ய‌க் கூடாது? ஏ‌ன்?

ஆடி க‌ற்கடக மாத‌ம் எ‌ன்று சொ‌ல்ல‌ப்படு‌‌கிறது. ஆடி என்றால் கடக மாதம், சக்தி மாதம் என்று சொல்லப்படும். ஆதிபராசக்தியின் மாதம் இது. இ‌ம்மாத‌த்தை அண்ட சராசரி என்றும் கூறுவோம்.

மார்கழி தனுர் மாதம் என்று‌ம் சொல்லப்படு‌கிறது. இந்த இரண்டு மாதங்களில்தான் நமது உள் உணர்வுத் திற‌ன் அதிகப்படுத்தப்படும்.

இதற்கான கோள் அமைப்புகள் இந்த மாதங்களில் இயற்கையாக அமையும். அப்படி அமைவதால்தான் இந்த இரண்டு மாதங்களில் ஆன்மீக முய‌ற்‌சிகளை மே‌ற்கொ‌ள்ளலா‌ம். அதாவது மன ஆற்றலை அதிகப்படுத்தவது, நெறிபடுத்தவது போ‌ன்றவை. வேலை தேடுவதில் விடா முயற்சி போன்றவைகள் இ‌ம்மாத‌த்‌தி‌ல் மே‌ற்கொ‌ண்டா‌ல் வெற்றி பெறும்.

இந்த இரண்டு மாதங்களில் உருவாகும் நண்பர்களும், புதிய உறவுகளுக்கும் சரியாக இரு‌க்காது. அதற்குக் காரணம் சூரியனின் நிலை. ஆடி மாத‌த்‌தி‌ல் சூரியன் கடகத்தில் உட்காருகிறது. எனவே அதற்கு‌ரிய மனநிலையை தராது. பாதியில் வந்து போகும் நட்பு வட்டமே அந்த மாதங்களில் இருக்கும். இ‌ந்த மாத‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ந‌ட்போ அ‌ல்லது உறவோ இறு‌தி வரை ‌நீடி‌க்காது. ர‌யி‌ல் ந‌ட்பை‌ப் போல இற‌ங்‌கியவுட‌ன் முடி‌ந்துவுடு‌ம். இறுதி வரை இருக்கும் நட்பு அல்லது உறவு என்பது இருக்கவே இருக்காது. கடகம் என்பது கடல் வீடு. கடல் வீட்டில் சூரியன் அமரும் போது நீடித்த நிலையை‌த் தராது.

இதை ந‌ன்கு அ‌றி‌ந்தே நம் முன்னோர்கள் அந்த காலத்திலேயே அந்த இரண்டு மாதங்களிலும் திருமணம் செய்வதை தவிர்த்து வந்துள்ளனர்.

அதோடு மட்டுமல்லாமல் இயற்கை சூழல் என்று எடுத்துக் கொண்டாலும் ஆடி மாதம் என்பது வேளாண் தொடர்பான மாதகமாக இருக்கும். ஆடி பட்டம் தேடி விதை என்று ஒரு பழமொழி உள்ளது. விதைக்கக் கூடிய மாதம் ஆடி. எனவே வேலையில் கவனம் செலுத்த வேண்டிய மாதமாகும்.

கடகம் சந்திரனுடைய வீடு. சூரியன் உயிருக்கானது. சந்திரன் உடலுக்கானது. எனவே சந்திரனுக்கான வீடான கடகத்தில் அதன் எதிர் கிரகம் சூரியன் அமரும்போது உடல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும்.

இந்த மாதத்தில் தாம்பத்ய உறவு ஆரம்பிப்பது சரியாக இருக்காது. தாம்பத்யத்தில் ஆரம்பத்திலேயே விரிசல், திருப்தியற்ற நிலை ஏற்படும். இதனா‌ல்தா‌ன் ஆடி மாத‌த்‌தி‌ல் பு‌திதாக மணமான மணம‌க்களை ‌பி‌ரி‌த்து வை‌ப்பது‌ம், மணமகளை தா‌ய் ‌‌வீ‌ட்டி‌ற்கு அழை‌த்து‌ச் செ‌ன்று‌விடு‌ம் வழமையு‌ம் உ‌ள்ளது.

கிட்டத்தட்ட இதே சூழல் தான் மார்கழியிலும் நிலவுகிறது. மார்கழி தனுர் மாதம். தனு‌ர் எ‌ன்றா‌ல் வில் அம்பை குறிக்கும். அதாவது ஆயுத மாதம். அது கொலை புரிவதற்கான ஆயுதமாகக் கருதப்படுகிறது.

வில் அம்பு என்றாலே அது வன்முறையைத்தான் குறிக்கும். அதில் சூரியன் அமரும். இதனா‌ல் எதையும் ஒருமுகப்படுத்த இயலாது. ‌வி‌ண்‌ணி‌ல் தனு‌ர் ந‌ட்ச‌த்‌திர‌க் கூ‌ட்ட‌ம் இரு‌க்கு‌ம் அமை‌ப்பை வை‌த்து‌த்தா‌ன் அதற்கான கு‌றியை அதாவது ‌வி‌ல் அ‌ம்பாக அறிஞர்கள் கு‌றி‌த்தா‌ர்க‌ள்.

இ‌ந்த மாத‌ங்க‌ளி‌ல் தனித்த செயல்கள், தனது மனதை பக்குவப்படுத்திக் கொள்ளுதல் நல்லது. எந்த உய‌ர்க‌ல்‌வி, ப‌யி‌ற்‌சி‌க் க‌ல்‌வி‌யி‌ல் சேர்ந்தாலும் நல்ல வெற்றி தரும்

தனுர் மாதம் என்பது தடுமாற்றம் தரும் மாதமாகு‌ம். சுய பரிசோதனை செய்யக்கூடிய மாதம். நமது பலம், பலவீனத்தை கண்டறிய வேண்டும். தானே தடுமாற்றம் செய்யும்போது இன்னொருவரை எப்படி வழி நடத்த முடியும்.

அதனா‌ல்தா‌ன் ‌திருமண‌ம் உ‌ள்‌ளி‌ட்ட உறவுக‌ள் ஏ‌ற்படு‌த்துவதை த‌வி‌‌ர்‌த்து‌ள்ளன‌ர்.

ருத்ராட்சம் அணிவது பற்றி

இந்துக்களில் சைவம், வைணவம் என்று கூறுவது போல், கிரகங்களிலும் சைவம், வைணவம் என்றெல்லாம் உண்டு.

சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகியவை சிவ கோத்திரம். சனியை இரண்டு பக்கத்திலும் வைக்கலாம்.

செவ்வாய், குரு, சூரியன் ஆகிய மூன்றும் சைவக் கிரகங்கள், சைவக் கடவுள்கள் ஆகும். செவ்வாய் - முருகன், குரு - தட்சிணாமூர்த்தி, சூரியன் சிவனுக்குரியவர்கள்.

இந்த ஆதிக்கம் உடையவர்கள் எல்லாம் ருத்ராட்சம் அணிந்தால் பிரம்மாண்டமாக முன்னுக்கு வருவார்கள்.

அதிலேயும் ருத்ராட்சத்திலும் ஒன்று முதல் பல முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் உள்ளன. ஆனால் எல்லா முக ருத்ராட்சங்களும் பலன் அளிக்கக் கூடிய ருத்ராட்சங்களே. அதில் எந்த மாறுபாடும் இல்லை.

ஒவ்வொரு முகத்திற்கும் ஏற்றபடி அதில் மருத்துவ குணங்களும், ஆன்மீக குணங்களும் உள்ளன. பல்வேறு நூல்கள் இதைப் பற்றிக் கூறுகின்றன.

ருத்ராட்சத்தை எப்படி வேண்டுமானாலும் அணியலாம். ஆனால் ருத்ராட்சத்தை தனியாக அணியாமல் ஏதாவது ஒரு உலோகத்துடன் சேர்த்து அணிந்தால் அது இல்லற வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்லது.

அதற்காகத்தான் ருத்ராட்சத்தின் இரு பக்கத்திலும் பூன் போன்று செய்து அதனை நூலில் கட்டித் தொங்க விடுகிறார்கள்.

ஏழரை சனி, அஷ்டமத்து சனி எல்லாம் வந்தாலே பலர் தானே ருத்ராட்சத்தை விரும்பி அணிவதைப் பார்த்திருக்கிறேன். ஏழரை சனி, அஷ்டமத்து சனி வந்தால் பழமையானவற்றை விரும்புவார்கள். ருத்ராட்சம், யானை தந்தம், யானை முடி மோதிரம் போன்றவற்றை அணிவார்கள்.

மற்றவர்களிடம் இருந்து தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்காக அல்லது அந்தப் பொருளின் மீதுள்ள ஒரு நம்பிக்கையினால் அவ்வாறு செய்வார்கள்.


சனி தசை நடக்கும்போது தன்னம்பிக்கையை விட மற்ற பொருட்களின் மீதுதான் நம்பிக்கை அதிகமாக இருக்கும். அதை அணிந்து கொண்டால் அதனால் நமக்கு நன்மை அளிக்கும் என்றெல்லாம் நினைப்பார்கள்.

சனி ராசி உள்ளவர்களும் ருத்ராட்சத்தை விரும்பி அணிவார்கள். மகரம், கும்ப ராசிக்காரர்கள் ருத்ராட்சத்தை விரும்புவார்கள்.

ருத்ராட்சத்தை அணியலாம். அதனால் நல்ல பலன்கள்தான் கிட்டும்.

நாக தோஷம் என்றால்...

நாக தோஷம் என்பது கிராமப்புறங்களில் பிரசித்திபெற்றது. கழுத்தில் மாலைப் போட்டுக் கொண்டு, அதாவது கொடி சுத்தி குழந்தைப் பிறப்பது போன்றவையும் எல்லாம் நாக தோஷத்தினால் ஏற்படுவது என்பது நம்பிக்கை.

ராகு - கேதுவின் ஒளிக்கற்றை, அதாவது கிரகணங்களால் பாதிக்கப்படுபதனால் ஏற்படும் விளைவுகளை நாக தோஷம் என்கிறோம். ஒரு சில குழந்தைகள் பிறக்கும்போதே மஞ்சள்காமாலை நோயுடன் பிறக்கின்றன. இதுவும் கிரகண பாதிப்புதான் காரணம்.

லக்னத்தில் ராகு இருந்து சந்திரனுடன் கேது சேர்ந்தால் குழந்தை நீலமாகப் பிறக்கும்.

ராகு - கேது சில குறிப்பிட்ட இடங்களில் இருந்தால் அதனை சர்ப தோஷம் என்று கூறுவார்கள். லக்னம், லக்னத்தில் இருந்து முதல் இரண்டு இடங்களில் பாவ கிரகங்கள் இருந்தாலோ, லக்னாதிபதியை பாவ கிரகங்கள் பார்த்தாலோ பாலாதிர்ஷ்ட தோஷம் என்று கூறுவர். பாலாதிர்ஷ்ட தோஷம் இருக்கும் குழந்தைகளுக்கு முதுகில் எல்லாம் மச்சம் இருக்கும்.

நாக தோஷம் வலுவாக இருக்கும் பிள்ளைகளுக்கு பாம்பு போலவே மச்சம் இருக்கும். தொடை, தலை போன்று ஒவ்வொரு இடத்தில் இருக்கும் மச்சத்திற்கும் ஒவ்வொரு பலன். அதற்கேற்ற பலன்களை அது கொடுக்கும்.

நாகப் பிரதிஷ்டம் என்பது ஆண் பாம்பும் பெண் பாம்பும், நாகப்பாம்பும், சாரைப் பாம்பும் இணைவது போன்று கல்லில் வடித்து அரசும், வேம்பும் சேர்ந்திருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தால் விசேஷம் என்று மனுநீதி என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறது.

தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள்?

சைவ சமயத்தில் அறிவுச்சுரங்கமாக கருதப்படுபவர் தட்சிணாமூர்த்தி. இவர் ஞானத்தின் வெளிப்பாடாக கருதப்படும் அவதாரம். சரஸ்வதிக்கு அடுத்தபடியாக ஓலைச் சுவடியுடன் காட்சி தருபவரும் இவரே.

தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் அலைபாயும் மனது கட்டுக்குள் வரும். தன்னை வழிபடுபவரின் சிந்தனையை அஞ்ஞானத்தில் இருந்து ஞானத்திற்கு வழிநடத்திச் செல்லும் வலிமை இவருக்கு உண்டு.

வாழ்வில் எது நிலைக்கும், எது நிலைக்காதது என்பதை உணர்த்தக் கூடியவர். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தவறான பாதைக்கு செல்பவர்கள் இவரை வழிபட்டால் ஒழுக்கமான நல்வாழ்வைப் பெறலாம். இவரை வழிபடத் துவங்கினால் வாழ்வில் அமைதி ஏற்படும்.

குரு பகவானுக்கு உகந்த தினமான வியாழக்கிழமை, குருவுக்கான நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் மற்றும் நாள்தோறும் வரும் குரு ஓரையிலும் (ஒரு நாளில் அந்த ஒரு மணி நேரம்) தட்சிணாமூர்த்தியை வழிபட உகந்த காலங்களாகும்.

இவரை வழிபடுவதன் மூலம் சந்தான பாக்கியம் பெறலாம். குழந்தைகளின் படிப்பிலும், அறிவுக்கூர்மையிலும் நல்ல முன்னேற்றம் தெரியும்.

கொண்டைக்கடலையை மாலையாக அணிவித்தும், வெள்ளை நிற மலர்களான முல்லை, மல்லிகை மலர்களால் வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்களை அறியலாம்.

காளஹஸ்தி போன்ற பிரபல கோயில்களில் தட்சிணாமூர்த்தியை இறுதியாக வழிபடுவது ஏன்?

தட்சிணாமூர்த்தி சிவனுடைய ஒரு அவதாரம். மூலவரை சேவித்த பின்னரே அவரது மறுவடிவமான அவதாரங்களை வழிபட வேண்டும்.

பணம், புகழ், செல்வாக்கு போன்ற அனைத்தையும் வழங்கக் கூடியவர் சிவன். இவரது அவதாரமான தட்சிணாமூர்த்தி ஞானம், அறிவுச் செல்வத்தை அளிப்பவர்.

பணம், புகழ் என அனைத்தையும் பெறுபவர்கள் அதனை முறையாக பராமரிக்க முடியாமல் இழப்பதும் உண்டு. அதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்க, ஞானத்தை வழங்கும் தட்சிணாமூர்த்தி வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

இதன் காரணமாகவே மூலவரை (சிவன்) வழிபட்ட பின்னர் அவரது அவதாரங்களை வழங்க வேண்டும் என்ற வகையில் பிரபல கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.

செ‌வ்வா‌ய் தோஷ‌ம் குறைபாடு அ‌ல்ல!

செவ்வாய் கிரகத்திற்கென்று சில காரகத்துவம் உண்டு. செவ்வாய் என்பது உடலின் இரத்த அணுக்களுக்குரிய கிரகம். அடுத்து, செவ்வாய்தான் பூமிக்குரிய கிரகம். இதே செவ்வாய்தான் உடன்பிறப்பிற்குரிய கிரகம். செவ்வாயுடன் ராகு வரும் போதெல்லாம் அவர்கள் மோசமான சூழ்நிலையில் பிறந்திருப்பார்கள். செவ்வாயுடன் கேது இருந்து அதை சனியும் பார்த்தால் அவர் வனத்தில் பிறந்திருப்பர் என்று இருக்கிறது. எந்தவொரு மருத்துவ உதவியும் இல்லாத இடத்தில் பிறந்திருப்பார்கள்.

செவ்வாயுடன் சூரியன் சேர்ந்து அதை குரு பார்த்தால் ஆசிர்வதிக்கப்பட்டச் சூழலில் பிறந்திருப்பார்கள். சூழல் என்பதையும் செவ்வாயை அடிப்படையாக வைத்துத்தான் சொல்கிறோம். செவ்வாய்தான் கிட்டத்தட்ட நிகழ்வுகளை நிர்ணயிக்கக்கூடிய கிரகம். அதாவது நடத்தை கோணங்கள் என்று சொல்வோமே, உடலில் நடத்தை கோணங்களை மாற்றக்கூடிய சக்தி செவ்வாய்க்கு உண்டு. மேலும் மரபனு (ஜீன்) என்பதெல்லாம் செவ்வாய்குரியது என்று சொல்வார்கள். ரத்த அணுக்கள், குறிப்பாக ஆண்களுக்கு விந்தணுக்கள், சுக்லம், சுரோகிதம் இப்படி எல்லாவற்றிற்கும் செவ்வாய் ஆதாரமாக இருக்கிறது.

செவ்வாய் தோஷம் என்றால் அது கொஞ்சம் அதிகப்படியானதுஎன்று அர்த்தம். இதை நாம் ஒரு குறைபாடு என்று சொல்லக்கூடாது. உதாரணத்திற்கு 110 வாட்ஸ் பவர் இருந்தால்தான் சில பல்ப்புகள் எரியும். அதையே அதிக வாட்ஸ் கொடுத்தால் அந்த பல்ப் ஃபியூஸ் ஆகிவிடும். குறைந்த வாட்ஸ்லயும் ஃபியூஸ் ஆகிவிடும். அதுதான் செவ்வாய். செவ்வாய் சரியான நிலையில் இருந்துவிட்டால் பிரச்சனையில்லை. வக்ரமடைந்தாலோ அல்லது 7, 8 ஆகிய இடங்களில் இருந்தாலோ அதனுடைய சக்தி அதிகரிக்கிறது. இவ்வாறு அதிகரிக்கும் போது ஒரு மனிதனுடைய கோணத்தை மாற்றுகிறது.

காமத்தில் ஈடுபாடு மாறுபடும்!

செவ்வாய்தான் வீரியத்திற்குரிய கிரகம். வீராவேசமாகப் பேசுவதிலிருந்து, விந்தணுக்களுடைய வீரியத்திலிருந்து, ஆண் குறி எழுச்சியிலிருந்து அனைத்தையும் நிர்ணயிக்கக்கூடியது செவ்வாய்தான். இயல்பு நிலை, இயக்க நிலை என்று அனைத்தையும் நிர்ணயிக்கக்கூடியது செவ்வாய். ஆண், பெண் இருபாலருக்கும் செவ்வாயினுடைய அமைப்பு நன்றாக இருக்க வேண்டும். செவ்வாய் நீச்சமாகி சுபக் கிரக பார்வை இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு காமத்தில் ஈடுபாடு இருக்காது. இந்த மாதிரி ஆராய்ந்து பார்க்கும் போது, கல்யாணம் முடிந்து ஒரு வாரம் ஆகிறது. இன்னும் ஒரு வாரம் ஆகட்டும் என்று சொல்கிறார். எனக்கு மூடு இல்லை என்கிறார். இன்னும் ஒரு மாதம் போன பிறகு பார்க்கலாம் என்று சொல்கிறார் என்று சொன்னார்கள். ஜாதகத்தைப் பார்த்தால் ஒன்றுமே இல்லை. இந்த ஜாதகங்களை எப்படிச் சேர்த்தார்கள் என்று தெரியவில்லை. ஏனென்றால் அந்தப் பெண்ணிற்கு செவ்வாய் தோஷம் கடுமையாக இருக்கிறது. ஆணுக்குச் செவ்வாய் தோஷமே இல்லை. அதாவது செவ்வாய் வலுவாக இல்லை. வலுவான செவ்வாய்க்கு வலுவான செவ்வாயை சேர்க்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுடைய உடலுறவு திருப்திகரமாக இருக்கும். அதுதான் செவ்வாய் தோஷம் என்பதே.

ஒருவர் வந்தார். செவ்வாய் தோஷம் என்று சொன்னேன். உடனே எழுந்து பிறகு உட்கார்ந்தார்கள். செவ்வாய் தோஷம் இருக்கிறது என்றதும் ஏன் எழுந்து உட்காருகிறீர்கள், ஒன்றுமே கிடையாது. செவ்வாய் என்பது ஒரு அமைப்பு. உங்களுடைய பெண்ணுடைய ஜாதகத்தில் செவ்வாயினுடைய அமைப்பு இந்த மாதிரி இருக்கிறது. இதைத்தான் தோஷம் என்று சொல்கிறார்கள். ஆனால் இன்றைக்கு 95 விழுக்காடு எல்லாமே செவ்வாய் தோஷக்காரர்கள்தான். 5 விழுக்காடுதான் செவ்வாய் தோஷம் இல்லை. இவர்களுக்குத்தான் பொருத்தம் கிடைப்பது கடினமாக இருக்கிறது. முன்பெல்லாம் செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு கிடைக்காது. இப்பொழுது செவ்வாய் தோஷம் இல்லாதவர்களும் கிடைப்பதில்லை.

ருத்ராட்சத்தை யார் யாரெல்லாம் அணியலாம்?

புதனுடைய அம்சமாக, அதாவது சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம். சிவனின் அங்கத்திலிருந்து விழக்கூடிய வேர்வை என்றெல்லாம் சில புராணங்கள் சொல்கின்றன.

ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். சிலரெல்லாம் போகம் செய்யும் போது இருக்கக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் கியைடயாது, போகிக்கும் போது கூட இருக்கலாம். தீட்டு என்பது கிடையாது.

ஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணியும் போது, மந்த்ரா உபதேசம் பெற்று, குருநாதர் கையில் இருந்து வாங்கி அணியும் போதெல்லாம் மிகவும் நேமமிஷ்டையுடன் இருக்க வேண்டும். அதாவது தீட்சையாக தரும் ருத்ராட்சத்தை பெற்றுக்கொண்டு தவறான செயல்கள், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக் கூடாது.

ஆண், பெண் என இருபாலருமே ருத்ராட்சத்தை அணியலாம். பெண்களுக்கு இருக்கக்கூடிய இயல்பான இடர்பாடான நாட்களில் கூட அணிந்திருக்கலாம். அது ஒன்றும் குரோதம் கிடையாது. வட இந்தியப் பெண்கள் சிலர் தலையில் போடும் கிளிப்புகளில் கூட ருத்ராட்சத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய சக்தியும், மன அழுத்தத்தை குறைக்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு. பக்கவாதத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ருத்ராட்ச மாலையை உடம்பு முழுவதும் தேய்த்துவிடும் போது அது சரியாகிறது.

இன்றைக்கும் தரமான, பழமைவாய்ந்த சித்த வைத்தியர்கள் கால் முடக்கம், கை முடக்கம் இதற்கெல்லாம் மருந்தும் கொடுத்து, ருத்ராட்ச மாலையால் கை, கால்களை உருவி மருத்துவம் அளிக்கும் வழக்கமெல்லாம் இன்றைக்கும் இருக்கிறது.

சீரான இரத்த ஓட்டங்கள், கால் மறத்துப் போகாமல் இருப்பதற்கு போன்றவற்றிற்கும் ருத்ராட்சம் பயன்படும். ருத்ராட்சத்தின் சிறு துளியை இழைத்து உள்ளுக்கு சாப்பிடும் போது நோய் எதிர்ப்புச் சக்தியெல்லாம் அதிகரிக்கிறது. உடலிற்கு ஒரு மினுமினுப்பைக் கொடுக்கும். இதுபோன்ற மருத்துவக் குணங்கள் ருத்ராட்சத்திற்கு உண்டு. அதனால் யார் வேண்டுமானாலும் அணியலாம்.

ரஜ்ஜு பொருத்தம் இல்லையென்றால்...

மிக முக்கியமானது ரஜ்ஜு பொருத்தம். அதாவது ஜாதகனின் ஆயுள் எப்படியுள்ளது என்பதை அது குறிக்கிறது. நமது கிராமங்களில் இதனை கழுத்துப் பொருத்தம் என்று பெண்கள் கூறுவார்கள்.

என்னிடம் ஒரு குடும்பம் வந்தது. மணமகனின் ஜாதகத்தைக் காட்டியது. நான் ரஜ்ஜுப் பொருத்தம் சரியில்லை என்று கூறிவிட்டேன். அவர்கள் விடவில்லை. நாங்கள் 3 இடத்தில் பார்த்துவிட்டோம். எல்லோரும் செய்யலாம் என்கிறார்கள் என்றனர். பெண் வீட்டார் விடுவதாக இல்லை.

ஜாதகப்படி இருந்தால்தான் நான் சொல்வேன் எ‌ன்றே‌ன். இல்லை இல்லை, பையன் அருமையான பையன். ஹீரோ மாதிரி இருக்கிறான் என்றார்கள். அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் பையனைப் பார்த்ததில்லை. ஜாதகம்தான் நான் பார்க்கிறேன். உங்களுடைய பர்சனாலான விஷயமெல்லாம் வேண்டாம். அதையெல்லாம் என்னிடம் சொல்லாதீர்கள். என்னுடைய கணிப்பை நீங்கள் செய்யக் கூடாது என்று சொல்லிவிட்டு, செய்யக்கூடாது என்று எழுதி கொடுத்துவிட்டேன். மீறி செய்தார்கள். மூன்றே நாள்தான், பையன் இறந்துவிட்டார்.

இறந்துவிடுவார் என்ற விஷயத்தைச் சொன்னீர்களா?

அதை சொல்லியும் சொன்னதற்கு, பெண்ணுக்குத்தான் ஜாதகம் பார்க்க வந்தார்கள். அழகான பையன் இவனையே முடிக்க வேண்டும் என்று சொல்லித்தான் பார்க்க வந்தார்கள். அந்தப் பெண்ணோட அப்பா இங்கேயே உட்கார்ந்துகொண்டு, கல்யாணம் பண்ணலாம் என்று சொன்ன ஜோதிடருக்கு ஃபோன் போட்டு, இங்கே வித்யாதரன் கிட்ட வந்திருக்கிறோம். அவர் பையனுக்கு ஆயுள் இல்லை என்று சொல்கிறார் என்று பேசிவிட்டு ஃபோனை என்னிடம் கொடுக்கிறார். அவரும், ஆயுள் காரகன், அது இது என்று எல்லாம் பார்த்துவிட்டேன். எல்லாம் சரியாக இருக்கிறது. எல்லாம் செய்யலாம் என்று சொன்னார்.

அதற்கு நான் சொன்னேன், ஆயுள் காரகன், ஆயுள் ஸ்தான அதிபதியோட மனைவி ஸ்தானத்திற்கு உரிய கிரகம் சேர்ந்து கிடக்கிறது. அதனால் அவருக்கு ஒரு சுபம் நடந்து உடனேயே ஒரு அசுபம் நடக்கும் ஜாதகமாக இருக்கிறது. அதுவும் தற்பொழுது ராகு திசையில் சனி அந்தரம். அதனால் கண்டிப்பாக செய்யக்கூடாது என்று சொன்னேன். அதற்கு அவர் இல்லைங்க, நான் சொன்னா சொன்னதுதாங்க. நீங்க வேண்டுமானால் எங்க இடத்தில் வந்து விசாரித்துப் பாருங்கள் என்று சொ‌ன்னார்.

இ‌ப்ப பாருங்க, அதனால் என்ன ஆனது என்று. மீண்டும் அவர்கள் வந்திருந்தார்கள். கலைப்படாதீர்கள். உங்களுடைய பெண்ணிற்கு மறுமணம் இருக்கிறது. ஆனால் இது நீங்களா செய்த தப்பு. அதனால் நீங்கதான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று சொன்னேன்.

நீங்கள் குறிப்பிட்ட ரஜ்ஜு பொருத்தம் இல்லையென்றாலும் க‌ல்யாண‌‌ம் செய்யலாம். ரஜ்ஜு என்பது மாங்கல்ய பலம். கழுத்துப் பொருத்தம் என்று சொல்வார்கள் கிராமத்தில். கழுத்து மட்டும் நல்லா இருக்கிறதா என்று பார்த்து சொல்லு ஜோசியரே. அது இருந்தா போதும். மற்றது இல்லைன்னாலும், காலையில அடிச்சுக்கும் சாயங்காலம் கூடிக்கும் என்று சொல்வார்கள்.

நவகிரகங்களை வ‌ழிபடு‌ம் முறை எ‌ன்ன?

நவ கிரகங்களை ஒன்பது முறை சுற்றி வருகிறோம். இதேபோல, சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மரை இரட்டைப் படையில் சுற்றி வருகிறோம். உதாரணத்திற்கு, நவ கிரக தோஷம் இருக்கும் போது மட்டும் நவ கிரகங்களை ஒன்பது முறை சுற்றி வரவேண்டும். மற்றபடி அத்தனை முறை சுற்றி வரவேண்டிய அவசியம் இல்லை என்று சொல்கிறார்கள். இது எந்த அளவிற்கு உண்மை. இதை எப்படி சரியாக கடைபிடிப்பது?

நவ கிரகங்களுக்கு சாதாரணமாக 9 கிரகங்களுக்கு ஒவ்வொரு முறை. ஆனால் ஒரு முறை சுற்றினாலே போதும்.

"ஓம் ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச குரு சுக்ர சனிப்யச்ச ராகவே கேதவே நமஹ" என்ற மந்திரத்தைச் சொல்லி ஒரு முறை வலம் வந்தாலே போதும்.

"ஓம் நவகிரக பரபிரம்மனே நமக" என்று கூட சொல்லலாம். இதையெல்லாம் சொல்லிக்கொண்டு ஒரு முறை வந்தாலே போதும். 9 முறை சுற்றுவதிலும் ஒன்றும் தவறு கிடையாது. ஆனால் ஒரு முறையாவது சுற்றிவிடுவது நல்லது. அடுத்து எந்தக் கோளுடைய பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு அந்தக் கோளுக்கான, அந்த கிரகத்திற்கான மந்திரங்கள், அதனிடம் விளக்கேற்றுதல் இதெல்லாம் மிகவும் நல்லது. அதையும் செய்யலாம்.

ஏனென்றால் ஒவ்வொரு கிரகத்தினுடைய தாக்கமும் பூமியில் இருந்துகொண்டே இருக்கிறது. பூமியில் வாழக்கூடிய ஒவ்வொரு உயிரினத்தின் மேலும், ஒவ்வொரு அணுவையும் அது தாக்குகிறது. அதை நினைவு கூர்ந்து வணங்கும்போது ஒரு தொடர்பு நமக்குக் கிடைக்கிறது. அதனுடைய வைப்ரேஷன் ஒரு பாஸிடிவ் எனர்ஜி. மெண்ட்டலி ஒரு ·பீரினஸ் இதெல்லாம் நமக்குக் கிடைக்கிறது.

சனீஸ்வரருக்கு சனிக்கிழமையானால் எ‌ள் விளக்கெல்லாம் நிறைய பேர் ஏற்றுகிறார்கள். சனி எண்ணெய் வித்துக்களுக்கு உரிய கிரகம். இதேபோல, ஏழரை சனி வரும் போது இரும்புச் சத்து குறையும். அதனால்தான் இரும்புக்கு அதிபதியாக சொல்கிறோம். இரும்புச் சத்து குறைபாடு என்று சொல்கிறோமே அதெல்லாம் குறைகிறது. ஏழரை சனி, அஷ்டம சனி, சனி தசை இதெல்லாம் நடக்கும்போது குறைகிறது. சாதாரணமாக எள் இரும்புச் சத்து அதிகம் என்று சொல்வார்கள். அப்ப எந்த அளவிற்கு தொடர்பு இருக்கிறது என்று பாருங்கள்.

ஜாதகப் பொருத்தம் பார்க்கும் போது கவனிக்க வேண்டியது என்ன?

தற்போதைய காலகட்டத்தில் மணமகன், மணமகள் ஜாதகத்தில் 10 பொருத்தங்கள் இருக்கிறதா? என்றுதான் பெற்றோர் பார்க்கின்றனர். ஆனால் எனது தாத்தா காலத்தில் 21 பொருத்தங்கள் பார்த்தனர். அது காலப்போக்கில் படிப்படியாகக் குறைந்து 10 பொருத்தம் ஆனது.


தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜு ஆகிய 5 பொருத்தங்களையே தற்போதுள்ள ஜோதிடர்கள் பிரதானமாகப் பார்க்கிறார்கள். இதில் 3 பொருத்தங்கள் இருந்தாலும் திருமணம் செய்யலாம் என்று கூறுகின்றனர்.

ஆனால் இந்தப் பொருத்தங்களைவிட இருவரது ஜாதக நிலை, ராசி, லக்னம் ஆகியவற்றையும் பார்க்க வேண்டும். இதில் ராசி, லக்னம் இருவருக்கும் பொருந்துவது மிக மிக முக்கியம். தற்போது இருவருக்கும் நடக்கும் தசா புக்தி என்ன? அடுத்து வரப்போகும் தசா புக்தி எப்படி இருக்கும்? என்பதையும் கணித்து அவர்களுக்கு திருமணம் செய்யலாமா என முடிவு செய்ய வேண்டும்.

உதாரணமாக மணமகனுக்கு ராகு தசை நடந்தால் அவர் கேது தசை நடக்கும் பெண்ணை அவர் திருமணம் செய்யக் கூடாது. அதேபோல் ஏழரைச் சனி நடைபெறும் ஜாதகர், அஷ்டமச் சனி நடக்கும் பெண்ணை திருமணம் செய்யக் கூடாது. இவை உடனடிப் பிரிவைக் கொடுக்கக் கூடியவை என்பதால் இவற்றை தவிர்க்க வேண்டும்.

ஒரு சில ஜோதிடர்கள் 10 பொருத்தங்களில், 9 பொருத்தம் இருப்பதால் இருவருக்கும் திருமணம் செய்யலாம் எனக் கூறிவிடுகின்றனர். ஆனால் அது பலன் அளிக்காது.

மேலும், மணமகனுக்கு மோசமான தசாபுக்தி, தசை நடைபெறும் காலகட்டத்தில், பெண்ணுக்கு நல்ல தசா புக்தி, தசை நடக்கும் வகையில் இருக்க வேண்டும். அப்போதுதான் இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்படாது. மாறாக இருவருக்கும் மோசமான நிலை காணப்பட்டால் மனஸ்தாபம், சச்சரவுகள் ஏற்படும்.

இதற்கு அடுத்தப்படியாக குழந்தை ஸ்தானம் எனப்படும் 5ஆம் இடம் நன்றாக இருக்கிறதா? குரு சிறப்பாக அமைந்துள்ளாரா? என்பதையும் பார்க்க வேண்டும். இருவருக்கும் புத்திர தோஷம் இருந்தால் குழந்தையின்மைப் பிரச்சனை அல்லது ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு ஏற்படும். எனவே பொருத்தம் பார்க்கும் போதே இதனைத் தவிர்த்து விட வேண்டும்.

மணமக்களின் ஜாதகத்தில் இராசிக் கட்டங்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல் நவாம்சத்தில் உள்ள கிரக நிலைகளையும் கொண்டு பலன் சொல்ல வேண்டும். எனவே, மேற்கூறிய ஆலோசனைகளை பின்பற்றி பொருத்தம் பார்த்தால் அந்தத் திருமணம் ஆயிரம் காலத்து பயிராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஏழரை சனிக்கு சரியான பதிகாரம் வில்வ இலை!

வில்வ இலைக்கு அதிக சக்தி உண்டு. மருத்துவ ரீதியாக பார்க்கப் போனால் ஆண்களின் விந்தணு நீர்த்த தன்மையை போக்கும். விந்தணு நீர்த்த தன்மை பிரச்சினை இருப்பவர்கள் வில்வ இலையை சாப்பிட்டாலே போதும்.

அதற்காகத்தான், அந்த காலத்தில் பெருமாள் கோயிலுக்கும், சிவன் கோயிலுக்கும் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று சொல்வார்கள். ஏனென்றால் பெருமாள் கோயிலில் கொடுப்பது துளசி, சிவன் கோயிலில் கொடுப்பது வில்வம். இவை இரண்டுக்குமே அதீத சக்தி உண்டு.

பிரசாதங்கள் என்று கோயிலில் கொடுப்பவை அனைத்துமே மூலிகைகள்தான். ராஜ ராஜன் காலத்தில் எல்லாம் மூலிகைகளால் செய்யப்பட்ட சிவலிங்கங்கள் எல்லாம் உண்டு. சில கோயில்களில் எல்லாம் அபிஷேகங்கள் இருக்காது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள லிங்கம் மண்ணால் ஆனது என்றும் சொல்லப்படும். அதாவது மண்ணை மூலிகைச் சாறுகள், வில்வக் குழம்புகளை வைத்து செய்யப்பட்டது. அதனால்தான் அவற்றிற்கு அபிஷேகங்கள் செய்வதில்லை.

வில்வத்தின் வடிவத்தைப் பார்த்தால் சிறப்பாக இருக்கும். மூன்றாகப் பிரிந்திருக்கும். சூலம் என்று எடுத்துக்கொடுக்கலாம். மூன்று தெய்வங்களை குறிப்பதாகவும், நங்கூரத்தின் வடிவிலும் இருப்பதாக கூறலாம்.

சாதாரணமாக சிவனுக்கு எத்தனை ரத்தினம் அணிவித்தாலும், வில்வத்தால் பூஜை செய்தால் அதீத சக்தி கிட்டும். வில்வத்திற்கு அவ்வளவு மகிமை.

மேலும் நாம் தினமும் வில்வ பொடியை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நலம் கிட்டும்.

ரத்தத்தை சுத்திகரிப்பது, விந்தணு நீர்த்தத் தன்மை போன்ற பல பிரச்சினையை சீர் செய்யும். அம்மன் கோயிலில் கொடுக்கப்படும் வேப்பிலைக்கும் அதிக மருத்துவ குணம் உள்ளது.

வில்வத்தால் சிவனை அர்சிக்கும்போது, சிவனோடு நாம் இன்னும் நெருங்க முடியும், சிவனின் அருளைப் பெற முடியும் என்று சொல்லப்படுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக ஏழரை சனிக்கு சரியான பரிகாரம் வில்வம்தான் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

துலாம் ராசியில் சூரியன், புதன் இருப்பது நல்லதா?

பொதுவாக துலாம் ராசியில் சூரியன் நீச்சமடையும் என்று கூறுவர். அதற்குக் காரணம் துலாம் (ஐப்பசி) மாதத்தில் அடைமழை பெய்யும். மேகங்களால் சூரியன் சூழப்படும் மாதம் ஐப்பசி. இதனால் சூரியன் அப்போது வலுவிழப்பதால் நீச்சமடைகிறது.

அறிவியல் பூர்வமாகப் பார்த்தாலும் ஐப்பசியில் சூரியன் கதிர்களை மேகங்கள் மறைக்கும். எனவே துலாத்தில் சூரியன் இருப்பது அவ்வளவு சிறப்பல்ல என்று ஜோதிடம் கூறுகிறது.

ஆனால், சூரியனுடன், துலாத்திற்கு உரிய கிரகமான சுக்கிரன் இருந்தால் அது நீச்சபங்க ராஜயோகமாக மாறிவிடும். இதேபோல் எந்த வீட்டில் சூரியன் இருந்தாலும், அதனுடன் புதன் சேர்ந்தால் அது நிபுணத்துவ யோகத்தை வழங்கும். இதனை ‘புதாதித்ய யோகம்’ என்றும் சில நூல்கள் கூறுகிறது.

இந்த வாசகர் லக்னத்திற்கு 3வது வீட்டில் சூரியன், புதன் சேர்க்கை இருப்பதாக குறிப்பிட்டுள்ளதால் இவர் சிம்ம லக்னத்தை உடையவர் என்று தெரிகிறது.

சிம்ம லக்னத்திற்கு லக்னாதிபதியும், பிரபல யோகாதிபதியாகவும் சூரிய பகவான் வருகிறார். அவர் நீச்சம் பெற்றுள்ளதால் உடல் பலவீனமாகும். உணர்ச்சி வசப்பட்டு பேசக் கூடியவராக இருப்பார். சில நேரங்களில் முன்னுக்குப் பின் முரணாக முடிவெடுத்து விட்டு பின்பு வருந்தக் கூடிய நிலையும் இவருக்கு ஏற்படும்.

ஆனால் புதன், சூரியனுடன் இணைந்துள்ளதால் இவருக்கு கெடு பலன்கள் குறையும். அதிகளவில் பாதிப்பு ஏற்படாது. எனவே இவர் தைரியமாக இருக்கலாம்.

ஒருவருக்கு எந்த தசா புக்தி நடக்கிறது என்பதை எப்படிக் கணிப்பீர்கள்?

நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்தே இன்று தசா புக்தி கணக்கிடப்படுகிறது. உதாரணமாக பரணி நடத்திரம் என்றால் பிறக்கும் போதே சுக்கிர தசை இவ்வளவு ஆண்டுகள் மீதமுள்ளது. அதற்கடுத்து சூரிய தசை, சந்திர தசை, செவ்வாய் தசை எவ்வளவு காலம் உள்ளது என்று கணிப்பார்கள்.

லக்னம் எந்த நட்சத்திரத்தில் உட்கார்ந்திருக்கிறது, என்ன அமைப்பில் இருக்கிறது என்பதையும் பார்ப்பது நல்லது. உதாரணமாக ஒருவர் கடக லக்னத்தில் பிறந்திருப்பார். அவருடைய லக்னம் பூசம் நட்சத்திரத்தின் 2ஆம் பாதத்தில் அமர்ந்துள்ளது என்றால் அதற்கு என்ன தசை நடக்கிறது என்பதையும் கணித்தால் சிறப்பாக இருக்கும்.

இதுமட்டுமின்றி கால சக்கர தசை என்றும் உள்ளது. இதனை வைத்து சிலவற்றை கணிக்க முடியும்.

ஆனால் இன்றைய நடைமுறையில் உள்ள வழக்கம் என்னவென்றால், ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறாரோ அதனை வைத்துதான் தசா புக்தி கணக்கிடப்படுகிறது. இதைத்தான் தற்போதுள்ள 90% ஜோதிடர்கள் பின்பற்றுகின்றனர். மீதமுள்ள 10% ஜோதிடர்களே அனைத்து தரப்பையும் ஆராய்ந்து கணிக்கின்றனர்.

சந்திராஷ்டமம் என்றால் என்ன?

ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் வந்தால் அது சந்திராஷ்டம், அதாவது ரிஷப ராசிக்கு எட்டாம் ராசி தனுசு ராசி. தனுசு ராசியில் மூலம், உத்திராடம், உத்திராடம் முதல் பாதம் ஆகிய 3 நட்சத்திரங்களும் இருக்கும்.

அந்த நட்சத்திரங்கள் ஒவ்வொரு மாதமும் வரும். அந்த நட்சத்திரங்கள் நடைபெறும் நாட்களில் மன உளைச்சல், கோபம் போன்றவை அதிகம் ஏற்படும்.

சந்திரன்தான் எல்லாவற்றிற்கும் உரியவன். மனசுக்கு உரியவன். செயல்பாடுகளை கட்டுப்படுத்துபவன். எனவே மனோகாரகன் எட்டில் மறையும்போது எதிர்மறையான செயல்கள் அதிகரிக்கும்.

அதனால்தான் சந்திராஷ்டம நாட்களில் எச்சரிக்கையாக இருங்கள். வாகனத்தை இயக்கும்போது பொறுமையை கடைபிடியுங்கள் என்று அறிவுறுத்துகிறோம்.

ஆனால் ஒரு சிலருக்கு சந்திராஷ்டமம் நல்ல பலன்களை அளிக்கும். அவர்களுக்கு பிறக்கும்போதே லச்னத்திற்கு 8, 6, 12ல் மறைந்தவர்களுக்கு எல்லாம் சந்திராஷ்டம் நன்றாக இருக்கும்.

Wednesday, May 4, 2011

ச‌னி பகவா‌ன் யோகா‌திப‌தியாகவு‌ம் இரு‌‌க்‌கிறாரே?


த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: மிதுன ராசிக்காரர்களுக்கு யோகாதிபதி சனி பகவான் என்று கூறியுள்ளீர்கள். சனி பகவான் சங்கட பகவான்தானே? 
ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: எல்லா கிரகங்களும், எல்லோருக்கும் நல்லது செய்யும் என்று அர்த்தம் கிடையாது. மேஷ லக்னம், மேஷ ராசியாக இருந்தால் அவர்களுக்கு குரு பகவான் யோகாதிபதி. ஆனால் ரிஷப லக்னம், ரிஷப ராசியாக இருந்தால் குரு பகவான் யோகாதிபதி கிடையாது. 

பொதுவாக குரு என்பது சுப கிரகம். அவ்வளவுதான். அதேபோல, பொதுவாக சனி என்பது பாவ கிரகம். ஆனால், ஒரு ராசிக்கு யோகாதிபதியாகவும், இன்னொரு ராசிக்கு பாவ கிரகமாகவும் வருவார். ராசி, லக்னத்தைப் பொறுத்து இப்படி வித்தியாசப்படுகிறது. ரிஷப ராசிக்கு சனி ஒருவரே மேலான லாபத்தைப் பெற்றுத் தரக்கூடியவர். இதை, பல அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களுடைய ஜாதகத்தைப் பார்த்து தெரிந்து கொண்டிருக்கிறோம். 

நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த ஒருவர் அதே நிறுவனத்தின் முதலாளியாக ஆகியிருக்கிறார், சனி திசையில். இதுபோன்ற அமைப்பையெல்லாம் பார்த்திருக்கிறோம். ரிஷப ராசி, மிதுன ராசி, கன்னி ராசி, துலாம், மகரம், கும்பம் இவர்களுக்கெல்லாம் சனி பிரதான கிரகம். இவர்தான் இவர்களுடைய தலையெழுத்தை நிர்ணயிக்கக்கூடியவர். இவர் நன்றாக இருந்து, அந்த திசையும் வந்துவிட்டால், ஒன்றுமில்லாத நிலையில் இருந்து பெரிய நிலைக்கு வந்துவிடுவர். 

அதாவது, தெருக்கோடியில் நின்றவர் பல கோடிக்கு அதிபதியாகிவிட்டார் என்று சொல்வார்களே அதுமாதிரி. இதுபோன்று நடைமுறையில் நாங்கள் பார்த்து வியக்கிறோம். சனி கொடுக்க ஆரம்பித்துவிட்டால் அதை யாராலும் தடுக்க முடியாது. சனி கொடுக்க ஆரம்பித்துவிட்டால் சங்கரனாலும் தடுக்க முடியாது என்று ஒரு பழமொழி கூட உண்டு. அவ்வளவு விஷயங்கள் சனி பகவானுக்கு உண்டு.